‘2 ஆயிரம் பேர் வசிக்கும் காட்டாங்குளத்தூர் செந்தமிழ் நகரில் ரேஷன் கடை இல்லை!’

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்​கும் காட்​டாங்​குளத்​தூர் செந்​தமிழ்​நகர் பகுதி​யில் புதிதாக ரேஷன் கடை அமைக்​கப்​படுமா என்று அப்பகுதி பொது​மக்கள் நீண்ட நாட்​களாக எதிர்​பார்க்​கிறார்​கள். சென்னை தாம்​பரத்தை அடுத்த மறைமலைநகர் நகராட்​சிக்கு உட்பட்ட பகுதி காட்​டாங்​குளத்​தூர் செந்​தமிழ் நகர். பொத்​தேரி - காட்​டாங்​குளத்​தூர் இடையே ஜிஎஸ்டி சாலை​யில் இருந்து சுமார் ஒருகிலோ மீட்டர் தொலை​வில் அமைந்​துள்ளது. செந்​தமிழ் நகர் மற்றும் அதன் அருகேயுள்ள விஜிஎன் நகர் பகுதி​யில் 500-க்​கும் மேற்​பட்ட வீடு​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள் உள்ளன.

அரசு மற்றும் தனியார் ஊழியர்​கள், தொழில் செய்​வோர், தொழிலா​ளர்கள் என ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்​கின்​றனர். சென்னை நகர வாசிகள் பலர் அமைதி​யான, நெருக்கடி இல்லாத, காற்​றோட்டம் மிக்க பகுதி என கருதி தொடர்ந்து இப்பகு​தி​யில் குடியேறிய வண்ணம் உள்ளனர்.

இதனால் நாளுக்கு நாள் இப்பகுதி விரிவடைந்து கொண்டே போகிறது. அதோடு பஸ் மற்றும் ரயில் வசதி, அருகிலேயே பள்ளி, கல்லூரிகள், மருத்​துவ​மனை​கள், வணிக வளாகங்கள் என தேவையான வசதிகள் இருப்​ப​தால் இப்பகுதி பலரும் விரும்​பக்​கூடிய பகுதியாக வளர்ந்து வருகிறது.

இங்கு வசிப்​போரில் பெரும்​பாலானோர் கீழ்​நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்​கத்​தினர். அவர்கள் ரேஷன் கடைக்​குச் செல்ல வேண்​டு​மானால் ஒரு கி.மீ தொலை​வில் உள்ள பொத்​தேரி அல்லது கோனாதி அல்லது காட்​டாங்​குளத்​தூரில் உள்ள ரேஷன் கடைக்​குத்​தான் செல்ல வேண்​டி​யுள்​ளது. முதியவர்கள் இவ்வளவு தூரம் செல்​வதற்கு சிரமப்​படு​கிறார்​கள். ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்​கக்கூடிய இப்பகு​தி​யில் ரேஷன் கடை இருந்​தால் மிகவும் வசதியாக இருக்​கும் என்று அப்பகுதி பொது​மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முரு​கானந்தம்

இதுதொடர்பாக செந்​தமிழ் நகர் குடி​யிருப்​போர் நலச்​சங்​கத்​தின் தலைவர் கே.முரு​கானந்தம் கூறிய​தாவது: இப்பகு​தி​யில் புதிய ரேஷன் கடை அமைப்பது என்பது அத்தி​யா​வசிய தேவை ஆகும். பெரும்​பாலானோர் காட்​டாங்​குளத்​தூர் அல்லது பொத்​தேரி ரேஷன் கடைகளுக்​கு சென்​று​ தான் பொருட்களை வாங்கி வருகின்​றனர். பொத்​தேரி ரேஷன் கடைக்​குச் செல்ல வேண்​டு​மானால் அங்குள்ள ரயில்வே கேட் மற்றும் ஜிஎஸ்டி சாலையை கடந்​து​தான் செல்ல வேண்​டும்.

ரயில்வே கேட் அடிக்கடி மூடப்​படு​வ​தா​லும் வாகன போக்கு​வரத்து மிகுந்த ஜிஎஸ்டி சாலையை கடக்க வேண்​டி​யிருப்​ப​தா​லும் மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் நடந்து சென்​றாலும் சரி இரு சக்கர வாகனங்​களில் சென்​றாலும் சரி கடினமாக இருக்​கிறது. செந்​தமிழ்​நகர், அதை ஒட்டி​யுள்ள விஜிஎன் நகர் பகுதி​யில் ஏறத்தாழ 500 ரேஷன் கார்​டுகள் இருக்​கும். எனவே, இப்பகு​தி​யில் ரேஷன் கடை திறந்​தால் இப்பகுதி மக்களுக்கு மிகவும் வரப்​பிரசாதமாக இருக்​கும்.

ஒருவேளை குறிப்​பிட்ட எண்ணிக்கை​யில் கார்​டுகள் இருக்க வேண்​டும் என்ற விதி​முறை இடையூறாக இருந்​தால் குறைந்​த​பட்சம் பகுதிநேர ரேஷன் கடையை​யாவது திறக்​கலாம். வாரத்​தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் திறந்​தாலேபோதும். இங்கு நக​ராட்​சிக்கு சொந்​தமான இடங்கள் உள்ள​தால் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்​துக்கு பஞ்சமில்லை. சம்​பந்​தப்​பட்ட அதிகாரி​கள் உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு ​அவர் கூறினார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்