ராமேசுவரம்: இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சட்டம் இலங்கை மீன்வளத் துறையின் மூலம் கடந்த ஜனவரி 2018-ல் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர் இலங்கை கடற்படையினரால் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 220-க்கும் மேற்பட்ட படகுகள் கைப்பற்றி 1,700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
மீனவர்களின் போராட்டங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளால் இலங்கை சிறைகளிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் வழக்கு நடைபெறும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் படகின் உரிமையாளர்கள் ஆஜராகவில்லை என்றால் படகுகள் அரசுடமையாக்கப்படுகிறது.
இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் அரசுடமையாக்கப்பட்ட படகுகள் மன்னார், யாழ்ப்பாணம், புத்தளம் மாவட்ட மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த மீன்பிடி இறங்குதளங்களை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்கில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் சேதடைந்த படகுகளை அழிக்கவோ அல்லது ஏலமிடப்படுகின்றன.
அதே சமயம், அரசுடமையாக்கப்பட்டு நல்ல நிலையில் விசைப்படகுகளை பயன்படுத்த இலங்கை மீன்வளத்துறையிடம் இலங்கை கடற்படை அனுமதி கோரியது. இலங்கை கடற்படையின் கோரிக்கையை ஏற்று யாழ்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டிருந்த IND/TN/08/MM.346, IND/TN/08/MM.1872, IND/TN/08/MM/1436, IND/TN/06/MM/6824, IND/TN/10/MM/693, IND/TN/10/MM/405, IND/TN/10/MM/2573, IND/TN/11/MM/857, IND/TN/11/MM/298, IND/TN/11/MM/28, IND/TN/16/MM/1872, IND/TN/16/MM/1861 ஆகிய எண்களை கொண்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகள் இலங்கை கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago