சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேர் உள்பட இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதம்: “தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
14 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற்றும் IND-GJ-25-MM-1582 என்ற பதிவெண்கள் கொண்ட இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றபோது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை.
மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும் பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago