சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுருக்கும் அறிக்கையில், “சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு ஏற்படுவதை தடுப்பதிலும், இயற்கையை காப்பதிலும், விவசாயத்தை மேம்படுத்துவதிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தடுப்பதிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முனைப்புக் காட்டி வந்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக, சேது சமுத்திரத் திட்டம் மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போது, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கர்பட்டியில் 2015.51 எக்டேர் நிலப் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை வேதாந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும்.
மேற்படி பகுதியில் உள்ள அரிட்டாபட்டி தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக விளங்குவதோடு, அங்கு 72 ஏரிகள், 200 சுனைகள், மூன்று தடுப்பணைகள் ஆகியவை உள்ளன. ஏழு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள அரிட்டாபட்டியில், வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாலிக் கழுகு உள்ளிட்ட 250 பறவை இனங்களும், மலைப்பாம்பு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களும் வாழ்கின்றன. ஏழு மலைக் குன்றுகளை கொண்டுள்ள தனித்துவமான நிலப்பரப்பு அங்குள்ள மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட இயற்கை வளம் மிகுந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும். இது மட்டுமல்லாமல், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆனைகொண்டான் ஏரி, அழகர்மலை ஆகியவை பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களுக்காகத் தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தினை தடுக்கும் வண்ணமும், மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago