தவெக அறிக்கையும், தளவாய் சேர்க்கையும்: பாஜக-வுக்கு பச்சைக் கொடி காட்டுகிறாரா பழனிசாமி?

By எல்.மோகன்

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தார் என்பதால் தளவாய் சுந்தரத்தை அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்தும் அக்டோபர் 8-ம் தேதி அதிரடியாய் தூக்கினார் பழனிசாமி.

பாஜகவுடன் அதிமுக அனுசரணையாக இல்லை என்பதைக் காட்டுவதற்காக இந்தத் தடாலடி நடவடிக்கையை எடுத்தார். இந்த நிலையில், பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் இப்போது தளவாய்க்கு அளித்திருப்பதன் மூலம் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறார் பழனிசாமி.

​தி​முகவும் பாஜகவுக்கும் தான் தங்களது அரசியல் எதிரிகள் என தெளிவான பாதையில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மறந்தும் அதிமுகவை விமர்ச்​சிக்க​வில்லை. இதைவைத்து, அவர் அதிமுக​வுடன் கூட்ட​ணிக்கு வரலாம் என்ற பேச்சுகள் படபடத்தன. அதிமுக​வுக்கும் அந்த நப்பாசை இருந்தது. ஆனால், ‘அதற்​கெல்லாம் வேலை இல்லை... அதிமுக​வுடன் கூட்டணி என்பது வதந்தி’ என தெளிவுபடுத்​தி​விட்டது தவெக.

இது தொடர்பான அறிக்கை வெளியான அதே தினத்தில் தளவாய்க்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்​பட்​டிருப்​பதுதான் பலரது வாய்க்கும் இப்போது அவலாகி இருக்​கிறது. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை எப்போதும் உண்டு.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவ​தாகவும் அவரது அரசியல் எதிரிகள் சொல்வார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதியில் அதிமுக வாக்குகளை தளவாய் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு திருப்​பி​விட்​ட​தாகவும் அதனால் தான் அதிமுக காப்புத் தொகையை காவுகொடுத்​த​தாகவும் சிலர் செய்தி பரப்பி​னார்கள்.

இப்படியான சூழலில் தான், ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்து சர்ச்​சைக்குள் சிக்கினார் தளவாய். பேரணி நடந்த இரண்டாவது நாளே, அதிமுக அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு​களில் இருந்து தளவாயை தள்ளி​வைத்தார் பழனிசாமி. இப்போது அதிமுக கூட்ட​ணிக்கு தவெக கதவடைத்த அன்றைய தினமே, மீண்டும் தளவாய்க்கு அதே பதவிகளை வழங்கி அனைவரையும் அதிரவைத்​திருக்​கிறார்.

தவறுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் கொடுத்​ததால் தளவாய்க்கு மீண்டும் பதவிகள் வழங்கப்​பட்டதாக பழனிசாமி சொன்னாலும் தற்போதைய அரசியல் சூழலில் பாஜக ஆதரவாளரான தளவாய்க்கு பறிக்​கப்பட்ட பதவிகளை மீண்டும் அளித்​திருப்பதன் மூலம் பாஜகவுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்​கிறார் பழனிசாமி என்ற பேச்சுக்கள் அரசியல் அரங்கில் எதிரொலிக்​கின்றன.

“பாஜகவுடன் இனி எப்போதும் உறவில்லை” என அதிமுக முக்கிய தலைவர்கள் சொல்வதெல்லாம் பெயரளவுக்​குத்​தான். தேர்தல் நெருங்க நெருங்க எல்லாமே மாறிவிடும். தளவாய் ஆர்எஸ்எஸ் பேரணி, மற்றும் இந்து மதம் சார்ந்த நிகழ்வு​களில் பங்கேற்பது அவரது தனிப்பட்ட ஈடுபாடு. அதை கட்சிக்​குள்ளே இருப்​பவர்கள் அரசிய​லாக்கி விட்டனர்” என்கிறார்கள் குமரி மாவட்ட அதிமுக மூத்த முன்னோடிகள்.

இதுதொடர்பாக தளவாய் சுந்தரத்​திடம் கேட்ட​போது, “அதிமுகவில் நான் வகித்துவந்த பொறுப்புகள் எடுக்​கப்​பட்டது குறித்தும் இப்போது மீண்டும் அதே பொறுப்புகளை வழங்கி இருப்பது குறித்தும் தற்போது எந்தக் கருத்தும் சொல்ல விரும்ப​வில்லை” என்றார். தளவாய்க்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்​பட்​டதில் குமரி மாவட்​டத்தில் அதிமுக​வினரை விட ​பாஜக​வினர் இப்போது படு குஷியில் இருக்​கிறார்​கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்