சென்னை: சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று (நவ.20) முதல் 23-ம் தேதி வரை முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15, இரவு 9.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
இதே நாட்களில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1.45, பிற்பகல் 2.20, 3.05, மாலை 4.05, 4.35, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago