‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தாண்​டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது என தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் அவருக்கு விருது வழங்​கலாம் எனவும் உத்தர​விட்​டுள்​ளது. மறைந்த கர்நாடக இசை பாடகியான எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்​திருந்த சிவில் வழக்​கில், “கடந்த 2004-ம் ஆண்டு எனது பாட்​டி​யின் மறைவுக்​குப்​பிறகு மியூசிக் அகாடமி அவரது நினை​வைப் போற்றி கவுரவிக்​கும் வகையில் அவருடைய பெயரில் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி’ என்ற விருதை ‘தி இந்து’ குழு​மத்​துடன் இணைந்து வழங்கி வருகிறது.

அதன்படி மியூசிக் அகாட​மி​யின் வருடாந்திர இசை கச்சேரிக்கான சீசனின்​போது ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசை உலகுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பாடகர்​களுக்கு ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்​. சுப்பு​லெட்​சுமி’ விருது வழங்​கப்​படு​கிறது. அதன்படி வரும் டிசம்​பரில் நடைபெறவுள்ள மியூசிக் அகாட​மி​யின் 98-வது ஆண்டு விழா​வில் பாடகர் டி.எம்​.கிருஷ்ணாவுக்கு எனது பாட்டி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் இந்த விருது வழங்​கப்​படு​வதாக அறிவிக்​கப்​பட்டு இருப்பது அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

பாடகர் டி.எம்​.கிருஷ்ணா, பத்திரி​கை​களி​லும், சமூக ஊடகங்​களி​லும் எனது பாட்டி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமிக்கு எதிரான கருத்துகளை மலிவான விளம்​பரத்​துக்​காகக் கூறி வருகிறார். கர்நாடக இசை உலகில் சிறந்து விளங்கிய எனது பாட்​டி​யின் நம்பகத்​தன்​மை​யைக் கேள்விக்​குள்​ளாக்கிய ஒருவரை, அவருடைய பெயரைக்​கொண்டு கவுர​விப்பது எவ்வாறு சரியாகும்? மேலும் எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் உயிலின்படி எந்தவிதமான விருதும் வழங்கக் கூடாது. எனவே மியூசிக் அகாட​மி​யில் அடுத்த மாதம் டிசம்​பரில் நடைபெறவுள்ள 98-வது ஆண்டு விழா​வில் டி.எம்​. கிருஷ்ணாவுக்கு எனது பாட்​டி​யின் பெயரில் சங்கீத கலாநிதி விருது வழங்க தடை விதிக்க வேண்​டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மியூசிக் அகாடமி சார்​பில் மனு தாக்கல் செய்​யப்​பட்​டிருந்​தது. அதில், “மனு​தாரர் குறிப்​பிட்​டுள்ள விருதுக்கான நபரை தேர்வு செய்​வ​தில் எங்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. கடந்த 2005-ம் ஆண்டு முதல் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் குழு​மம்​தான் அந்த விரு​தாளர்​களைத் தேர்வு செய்து வருகிறது. இதற்கு மறைந்த எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் குடும்ப உறுப்​பினர்​களிட​மிருந்து எந்த ஆட்சேபனை​யும் இல்லை என்ப​தால் இந்த வழக்கைத் தொடர மனுதா​ரருக்கு எந்த முகாந்​திர​மும் இல்லை” என கூறி​யிருந்​தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்பாக நடந்​தது. அப்போது மனுதா​ரரான ஸ்ரீனிவாசன் தரப்​பில் வழக்​கறிஞர் சரத் சந்திரன், மியூசிக் அகாடமி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் டி.மோகன், ‘தி இந்து’ சார்​பி்ல் மூத்த வழக்​கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், டி.எச்.ஜி நிறு​வனம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, டி.எம்​.கிருஷ்ணா தரப்​பில் வழக்​கறிஞர் சுக்​ரீத் பார்த்​த சாரதி ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் பிறப்​பித்​துள்ள இடைக்கால உத்தர​வி்ல், “இந்த வழக்கைத் தொடர எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பேரன் என்ற அடிப்​படை​யில் மனுதா​ரருக்கு அனைத்து முகாந்​திர​மும் உள்ளது. இறந்த ஆன்மாவைக் கவுர​விப்​ப​தற்கான சிறந்த வழி, அவரது விருப்​பத்​துக்கு மதிப்​பளிப்​பதும், அவரைப் போற்றி கவுர​விப்​பதும், அவரது புகழுக்கு அவமரி​யாதை செய்​யா​திருப்​பதும் ஆகும். எனவே இந்தாண்​டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி.எம்​.கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது.

ஆனால் எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் டி.எம்​.கிருஷ்ணாவுக்கு நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் ​விருது வழங்​கிக்​கொள்ள எந்த தடை​யும் இல்லை” என உத்​தர​விட்டு, மியூசிக் அ​காடமி தரப்​பில் ​தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை தள்​ளுபடி செய்து உத்​தரவு பிறப்​பித்​துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்