பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி சித்ரா நேற்று கூறியதாவது: போலி வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, அத்தகைய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்களின் பட்டியலை வாக்குச் சாவடி தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க முன்வந்தால், அவர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கு முன் அவர்களின் புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வ சாட்சியத்தை தலைமை அதிகாரி பெறுவார்.
அவர்கள் வாக்களித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 31-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது அது அவர்களுக்கு எதிரான சாட்சியமாக மாறும். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago