போதைக்கு அடிமையாக்கும் மருந்துகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷிக்கு, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாணவர்கள், பொதுமக்களிடம் போதை மாத்திரைகள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக சட்ட அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால் அதற்கு அடிமையாக்க கூடிய திறன்கொண்ட டேபென்டடால் போன்ற வலி நிவாரண மருந்துகள் ஆன்லைனில் மூலம் எளிதில் கிடைக்கிறது. தமிழக காவல் துறையினரும், மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தினரும் இதுதொடர்பாக பல்வேறு அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலம் அத்தகைய மருந்துகளை குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வாங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல், அடிமைப்படுத்தும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் இணையதளங்கள் குறித்த விவரங்கள் உண்மையானதாக இல்லாததால் அவர்களை கண்டறிய முடிவதில்லை.
இதுபோன்ற செயல்பாடுகள் போதை மருந்துகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை நீர்த்துப் போக வைக்கும் வகையில் உள்ளன. அட்டவணை எச் மற்றும் எச்1-ல் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றியோ, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநரின் கண்காணிப்பு இன்றியோ விற்பனை செய்வது மருந்து கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பான செயல் ஆகும். சமூக நலனுக்கும், பொது மக்களின் ஆரோக்கியத்துக்கும், அச்சுறுத்தலாகவும் விளங்கி வரும் இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுப்பது மாநில அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. எனவே, போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதைத் தடுத்து ஒழுங்குமுறைப்படுத்தவும், மக்கள் நலன் காக்கவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை முன்வர வேண்டும். சட்டவிரோத மருந்து விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதால், அத்தகைய தளங்களை சமூக நலன் கருதி நிரந்தரமாக முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago