சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிச.9, 10-ம் தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
தொடர்ந்து, பிப்.19-ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இரு பட்ஜெட்கள் மீதும் 22-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், துறைகள்தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
» டிசம்பர் இறுதிக்குள் மாவட்ட செயலாளர்களை நியமிக்க தவெக திட்டம்
» யானை தாக்கி இருவர் உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் தகவல்
இந்நிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, டிச 9, 10-ம் தேதிகளில் கூட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பேரவைத்தலைவர் மு.அப்பாவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ளார். விரைவில் முதல்வருடன் பேசி சட்டப்பேரவை கூடும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago