யானை தாக்கி இருவர் உயிரிழந்த விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூரில் யானை தாக்கி இருவர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. சிறிய அளவில் ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு நடந்ததாக, அந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் நடைபெற்ற சம்பவம்போல இனி வேறெங்கும் நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் காலங்களில் அவரது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இதைவிடுத்து, வாய்க்கு வந்ததைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்