உணவு சாப்பிடாமல் சோகத்துடன் காணப்படும் திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் கோயில் யானையை சுற்றி வந்து செல்பி எடுத்​த​தாலேயே யானை கோபமடைந்து, இருவரை தூக்கி வீசியது தெரிய​வந்​துள்ளது. அந்த யானை தற்போது அதிகாரி​களின் தொடர் கண்காணிப்​பில் உள்ளது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி திருக்​கோயி​லில் தெய்​வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்​கப்​பட்டு வருகிறது. நேற்று முன்​தினம் மாலை உதவி பாகன் உதயகு​மார், அவரது உறவினரான கன்னி​யாகுமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கி.சிசுபாலன் (59) ஆகிய இருவரை​யும் யானை தாக்​கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்​தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யது.

வனத் துறை அதிகாரி​கள், கால்நடை மருத்​துவக் குழு​வினர் யானையை ஆய்வு செய்​தனர். யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து, சிசிடிவி பதிவு​களைக் கொண்டு போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்​துள்ளன. தெய்​வானை யானை நேற்று முன்​தினம் மாலை​யில் வழக்கமாக கட்டி வைக்​கப்​படும் மண்டபத்​தில் கட்டி வைக்​கப்​பட்​டிருந்​தது. உதவி பாகன் உதயகு​மார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

சிசுபாலன் யானையை சுற்றிச் சுற்றி வந்து செல்பி எடுத்​துள்ளார். துதிக்கை​யில் முத்​தமிட்​டபடி​யும் செல்பி எடுத்​துள்ளார். இதனால் மிரண்ட யானை, அவரை துதிக்கை​யால் தூக்கி சுவற்றில் வீசி​யுள்​ளது. அவரைக் காப்​பாற்ற ஓடி வந்த உதயகு​மாரை​யும் யானை துதிக்கை​யால் தள்ளி​விட்​டுள்​ளது. சுவற்றில் வேகமாக மோதி​ய​தில் இருவருக்​கும் பலத்தகாயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சோகத்​தில் தெய்​வானை: உதயகு​மாரை தாக்கிய பிறகே அவரை அடையாளம் கண்ட தெய்​வானை யானை, அவரை துதிக்கை​யால் தடவிக் கொடுத்து, அவரை எழுப்​பிவிட முயன்​றுள்​ளது. பின்னர், தலைமை பாகன் ராதாகிருஷ்ணன் வந்து, யானை மீது தண்ணீரை பீச்​சி​யடித்து சாந்​தப்​படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்​குள் யானையைக் கட்டிப் போட்​டார். இந்த சம்பவத்​துக்​குப் பிறகு தெய்​வானை யானை சோகத்​துடனேயே காணப்​படு​கிறது. நீண்டநேரமாக சாப்பிட மறுத்​துள்ளது. நேற்று காலை​யில் சிறிதளவு உணவையே உண்டது.

தெய்​வானை யானை தற்போது எந்தவித ஆக்ரோஷ​மும் இல்லாமல், இயல்பாக உள்ளது. ஆனால், வழக்​கமான உற்சாகம் இல்லாமல் சோகமாகவே காட்​சி அளிப்​பதாக அதிகாரிகள் தெரி​வித்​தனர். யானை கட்டி வைக்​கப்​பட்​டுள்ள அறை அருகே பக்தர்கள் செல்லாத வகையில் காவல் துறை​யினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்​றனர். யானையை 5 நாட்கள் தொடர் கண்காணிப்​பில் வைத்​திருக்க அதிகாரிகள் முடிவு செய்​துள்ளனர். மேலும், யானையை புத்​துணர்வு முகா​முக்கு அனுப்புவது தொடர்​பாக​வும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, யானை தாக்​கிய​தில் உயிரிழந்த உதயகு​மார், சிசுபாலன் ஆகியோரது உடல்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் தக்கார் இரா.அருள்​முரு​கன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்​டோர் அஞ்சலிசெலுத்​தினர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்​களிடம் ஒப்படைக்​கப்​பட்டன. கோ​யில் வளாகத்​தில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்​கப்​பட்​டிருந்​தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்