விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை: பாஜக மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தருமபுரி: விவசா​யிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவித்​தொகையை தமிழக விவசா​யிகளிடம் கொண்டு சேர்க்​காமல், திட்​டத்​துக்கு தமிழக அரசு முட்டுக்​கட்டை போடு​கிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.

தருமபுரி மாவட்டம் பாப்​பாரப்​பட்​டி​யில் உள்ள பாரத மாதா ஆலயத்​தில் 2022-ல் போலீ​ஸாரின் தடையை மீறி நுழைந்தது தொடர்பாக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்​டோர் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்கு, தருமபுரி மாவட்ட கூடுதல் சார்பு நீதி​மன்​றத்​தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசா​ரணை​யில் ஆஜராவதற்காக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் தருமபுரி நீதி​மன்​றத்​துக்கு நேற்று வந்தனர்.

அப்போது செய்தி​யாளர்​களிடம் கே.பி.ராமலிங்கம் கூறிய​தாவது: தமிழகத்​துக்கு மத்திய அரசால் வழங்​கப்​பட்ட நிதிக்கான செலவினங்கள் தொடர்பான அறிக்கைச் சான்​றிதழை மத்திய அரசிடம் வழங்​க​வில்லை. இதனால்​தான், தமிழகத்​துக்கு கூடுதல் நிதியை மத்திய அரசால் வழங்க முடி​யாமல் உள்ளது. அதேநேரத்​தில், இந்தியா​விலேயே அதிகமான நிதியை பெற்றிருக்​கும் மாநிலம் தமிழகம் மட்டும்​தான். தமிழக அரசு கேட்​காமலேயே, மத்திய அரசு தமிழகத்​துக்கு அதிக நிதியை வழங்​கி​யுள்​ளது. தமிழக வளர்ச்​சி​யிலும், மக்கள் நலத் திட்​டங்​களைச் செயல்​படுத்து​வ​தி​லும் பாஜக அக்கறை செலுத்தி வருகிறது.

ஆனால், மத்திய அரசு நிதி வழங்​க​வில்லை என்று கூறி மக்களை திமுக ஏமாற்றக் கூடாது. அவர்கள் செய்​யும் தவறுகளை மறைத்து, மத்திய அரசு மீது பழி சுமத்தக் கூடாது. மத்திய அரசு முறை​யாகச் செயல்​படு​கிறது. தமிழக அரசு​தான் முறையற்ற நிர்​வாகம் நடத்தி வருகிறது. தமிழக முதல்வர் இனியாவது தன்னை திருத்​திக் கொள்ள வேண்​டும். மத்திய அரசிடம் இருந்து முறையாக நிதி​யைப் பெற்று, மக்கள் நலத் திட்​டங்​களைச் செயல்​படுத்த வேண்​டும். விவசா​யிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் மத்திய அரசு வழங்கி வரும் உதவித்​தொகையை தமிழக விவசா​யிகளிடம் கொண்டு சேர்ப்​ப​தில் மாநில அரசு சரியாக செயல்​பட​வில்லை. இந்த திட்​டத்​துக்கு தமிழக அரசு வேண்டு​மென்றே முட்டுக்​கட்டை போடு​கிறது.

விரை​வில் மத்திய அரசு சார்​பில் இந்த திட்டம் தொடர்பாக முகாம்​கள் நடத்தி, ​விண்​ணப்​பங்​கள் பெற்று, தகு​தியான அனைத்து ​விவசா​யிகளுக்​கும் உதவித்​தொகை கிடைக்க நட​வடிக்கை எடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்