செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வல்லிபுரம் ஊராட்சியில், சென்னை ஐஐடி சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் வகையில் உரப்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, சென்னை ஐஐடி சார்பில் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, சர்வே எண் 123-ல் உள்ள நிலத்தில் ஒருபகுதியாக 9.50 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, திட்டத்தை செயல்படுத்தவும் நிலம் தேர்வுக்கும் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், விரைவில் நவீன கட்டமைப்புகளுடன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரப்பூங்கா மற்றும் குப்பை தரம் பிரிக்கும் யார்டு அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், அதேபகுதியில் வசிக்கும் சிலர் மேற்கண்ட திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுக்களை வழங்கினர். உரப்பூங்காவை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, வல்லிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா அமுல் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஊராட்சி மன்றத்தில் முறையாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகே பணிகள் தொடங்கப்பட்டன.
» “கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை திரட்டி ஆம் ஆத்மியை விட்டு வெளியே வந்தேன்” - கைலாஷ் கெலாட்
» சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல்!
ஆனால், தனியார் நிலத்துக்கு செல்ல பாதை வேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தை எதிர்க்கின்றனர். எனினும், தனியார் நிலத்துக்கு செல்ல பாதைக்காக 20 அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிக்குமார் கூறும்போது, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், இப்பகுதி விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்லும் வழியாக உள்ளது. இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. வேறு ஒதுக்குப்புறமான இடத்தில் அதை மேற்கொள்ளலாம் என்றுதான் சொல்கிறோம் என்றார்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: மேற்கண்ட பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அதேபோல், தனியார் நிலத்துக்கு பாதை ஏற்படுத்த நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டத்தை உயர்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள கோயில் நிலத்தில் அமைக்க வேண்டும் என கூறி, சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அரசு நிலம் இருக்கும்போது, எதற்காக கோயில் நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினால், அருகில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காண்பிக்கின்றனர். அதனால், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஆய்வுக்கு உத்தரவிட்ட ஆட்சியர்: இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் கூறியதாவது: வல்லிபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட உள்ள உரப்பூங்காவுடன் கூடிய குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், செங்கல்பட்டு சார் ஆட்சியர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து உரிய விசாரணையுடன் நடவடிக்கை எடுக்க தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago