லாட்டரி சீட் அதிபருக்கு பாஜக மறைமுக ஆதரவு: புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது: "மின்துறையை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியிருக்கிறார். ரூ.300 கோடி நஷ்டம் வந்துவிட்டது. அதனால் விற்கிறோம் என கூறாமல் மாற்றி பதில் சொல்கிறார். தனியாரிடம் ரூ.200 கோடி மின் கட்டணம் வசூலிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் 4 சதவீதம் மின் திருட்டை கண்டுபிடிக்கவில்லை. இந்த பிரச்சினையை சரி செய்யாமல் கூடுதல் கட்டணம் நிர்ணயித்து மக்களிடம் வசூலிக்கிறார்கள்.

ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.6 என வசூலித்துவிட்டு பிறகு நஷ்டம் வருவதாக கூறுகிறார். நீதிமன்றத்துக்கு சென்று மின்துறையை தனியார் மயமாக்கப்பட்டோம் என்று கூறினால் வழக்கே இருக்காது. ஆனால் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம் என்று அமைச்சர் கூறுகிறார்.

புதுச்சேரி மக்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு லாட்டரி சீட்டு இலவசமாக அரசு கொடுக்கும். அதில் எவ்வளவு பரிசு விழுந்தாலும் மக்களுக்கு தருகிறோம் என்று கூறி பாஜக ஒரு வியாபாரத்தை கொண்டு வரும். புதுச்சேரிக்கு லட்டாரி சீட்டை மட்டும் கொண்டுவரவில்லை. லாட்டரி சீட்டுக்கு மூலப்பொருளையே கொண்டு வந்துள்ளார்கள். முன்பு லாட்டரி விற்பவர்கள்தான் இன்று லாட்டரி சீட் உரிமையாளரை கொண்டு வந்துள்ளார்கள்.

இனிமேல் புதுச்சேரி மக்கள் லாட்டரி அடிக்கும் மக்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் நம்முடைய பணம் எல்லாமல் லாட்டரிக்கு சென்று கொண்டே இருக்கும். இதற்கு பாஜகதான் முழு ஆதரவாக இருக்கிறது. லாட்டரி சீட் அதிபர் விழாவில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டர்கள்.

இதை பற்றி பாஜக அரசோ, கட்சியோ யாருமே கேட்கவில்லை. இதற்கு மறைமுகமாக பாஜக ஆதரவு கொடுக்கிறது என்றுதான் அர்த்தம். நம்முடைய மாநிலத்தை விற்கக் கூடியவர்களை விரட்டக்கூடிய நாள் வந்துவிட்டது. லாட்டரி அடிப்பவர்களை தூக்கி வெளியே போட்டால்தான் நாம் இருக்க முடியும். உடனடியாக போராட்டம் நடத்தி அவர்களை வெளியே அனுப்ப வேண்டும்.

முதல்வர் ரெஸ்டோ பார் திறந்தார். அடுத்து யார் வேண்டமானாலும் லாட்டரி சீட்டை விற்கலாம். எப்போது வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லுவார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது" என்று வைத்திலிங்கம் எம்பி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்