நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் எதிர்வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
கடலில் மீன்பிடிக்க சென்றிருக்கும் அனைத்து படகுகளும் 23-ம் தேதிக்குள் கரை திரும்பிட வேண்டும் என்றும் மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதி தீவிர தொடர் கனமழை, கடலில் கடும் அலை சீற்றம் மற்றும் இடி மின்னல் ஏற்படக் கூடும் என்பதால் மீனவர்கள் 23-ம் தேதிக்குள் கரை திரும்பிட வேண்டும், மேலும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவிட்டுள்ளார்.
விசைப்படகு மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வழங்கப்பட்டு வந்த டோக்கன் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி கட்டி வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
» அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்; விசாரணை டிச.11-க்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago