மாசிலா - விஜயா அறக்கட்டளை சார்பில் 5 ஆளுமைகளுக்கு ஜனநாயக பாதுகாவலர்கள் விருது

By செய்திப்பிரிவு

சென்னை: மாசிலா- விஜயா அறக்​கட்டளை சார்​பில் முன்​னாள் நீதிபதி கே.சந்​துரு, முன்​னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் உள்ளிட்ட 5 ஆளுமை​களுக்கு ஜனநாயக பாது​காவலர்கள் விருதை விஞ்​ஞானி மயில்​சாமி அண்ணாதுரை சென்னை​யில் நேற்று வழங்​கினார். மாசிலா- விஜயா அறக்​கட்டளை சார்​பில் ஜனநாயக பாது​காவலர்கள் விருது-2024 வழங்​கும் விழா சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்​காட்சிய அரங்​கில் நேற்று நடைபெற்​றது.

இதில் விஞ்​ஞானி மயில்​சாமி அண்ணாதுரை பங்கேற்று முன்​னாள் நீ​தி​மன்ற நீதிபதி சந்துரு, முன்​னாள் ஐஏஎஸ் அதிகாரி சகா​யம், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, இந்து என்.ராம், கலை, இலக்கிய விமர்​சகர் இந்திரன் ஆகியோ​ருக்கு விருது வழங்கி கவுர​வித்​தார்.

நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​து: இந்த ஆண்டு ஜனநாயகத்​தின் 4 தூண்​களான, சட்டப்​பேரவை, அரசு நிர்​வாகம், நீதித்​துறை, பத்திரிகை துறை ஆகிய​வற்றை சேர்ந்த ஆளுமை​களுக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும் ஜனநாயகத்​தின் 5-வது தூணாக இலக்கிய துறையை சேர்ந்​தவருக்​கும் விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

இன்று அறிவியல் தமிழ் வளர்ந்து வருகிறது. இதை பண்டைய இலக்​கி​யங்​களில் படிக்க முடி​யாது. இப்போது எழுதப்பட்டுள்ளவற்றில் தான் படிக்க முடி​யும். இதை உணர்ந்து இலக்​கியம் சார்ந்த நபருக்​கும் விருது வழங்​கப்​பட்​டிருப்பது பாராட்டுக்​குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி சந்துரு பேசும்​போது, “ஜனநாயகத்தை மையப்​படுத்தி விருது வழங்​கு​வதும், எனக்கு விருது வழங்கி​யிருப்பதும் பெரு​மைக்​குரியதாக உள்ளது” என்றார். பாலபாரதி பேசும்​போது, ``குடும்பத்​தில் ஜனநாயகம் இருக்க வேண்​டும். அதை உணர்ந்து தான் ஒரு குடும்பம் ஜனநாயக பாது​காவலர் விருதை வழங்கி​யிருக்​கிறது” என்றார்.

சகாயம் பேசும்​போது, “நமக்கு பல வாய்ப்புகளை தந்த, இந்த ஜனநாயகத்​துக்கு ஏதாவது செய்ய வேண்​டும் என்று இந்த குடும்பம் விருது வழங்கி வருவது பாராட்டுக்​குரியது. எனக்கு கொடுக்​கப்​பட்ட விருது தொகையை, நான் நடத்தி வரும் ஆதரவற்​றோர் இல்லத்​துக்கு வழங்​கு​கிறேன்” என்றார்.

என்.ராம் பேசும்​போது, “ஜனநாயகத்​தின் பெயரில் இக்குடும்பத்​தின் விருது வழங்​கும் பணி தொடர வேண்​டும்” என்றார். இந்திரன் பேசும்​போது, ஆய்வகத்​துக்​குள் முடங்கி கிடக்​கும் விஞ்​ஞானி ஜனநாயகம் குறித்து கவலைப்பட தொடங்கி​விட்​டார்.

தமிழுக்கு நல்ல​காலம் தொடங்கி​விட்​டது” என்றார். இந்நிகழ்ச்​சி​யில் சென்னை அறிவியல் கழக தலைவர் ஜெ.கு​மார், மாசிலா- விஜயா அறக்​கட்டளை தலைவரும், லேசர் இயற்​பியல் விஞ்​ஞானி​யுமான ​மாசிலாமணி, அவரது மனைவி ​விஜயா, மகன்​கள் ​திருஞானசம்​மந்​தன் (அறக்​கட்டளை அறங்​காவலர்), இளங்கோ, பாரதி உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்