சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர். மேலும், தமிழகத்தி்ல் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், தமிழகத்தில் உள்ள 9 வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை தாக்கல் செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், அந்த சிறுமியின் தாயாரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாக தெரிவித்தார்
» எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி: 3 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
» வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி
அதையடுத்து நீதிபதிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடம், "இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தால் விசாரணை முடிவடைவதற்கு 4 முதல் 7 ஆண்டு்கள் வரை ஆகலாம். விசாரணையின் கோணம் எவ்வாறு செல்கிறது என்பதையும் கூற இயலாது. எனவே தமிழகத்தைச் சேர்ந்த வெளிமாநிலத்தில் உள்ள மூத்த அதிகாரியின் தலைமையில் தமிழகத்தில் உள்ள சிறந்த போலீஸ் அதிகாரிகளை வைத்து இந்த வழக்கை விசாரிக்கலாம். அதை உயர் நீதிமன்றமும் கண்காணிக்கும்" என்றனர்.
மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம்பெறுவர்.
இந்தக்குழு தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும். அதை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க தகுதியான அமர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த அமர்வின் முன்பாக சிறப்பு புலனாய்வு குழு தனது நிலை அறிக்கையை வாரம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரமும், இதர செலவுக்காக ரூ. 25 ஆயிரத்தையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக அவரது பெற்றோரிடம் தமிழக அரசு ஒருவாரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago