சென்னை: க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழ்வேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேரின் நூல் களை நாட்டுடைமையாக்கி. அவர்களின் வாரிசுகளுக்கு நூல் உரிமைத் தொகையான ரூ.90 லட்சத்தை தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங் கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச் சியில், தமிழறிஞர்கள் ஆறு. அழகப்பன் மற்றும் ராமலிங்கம் என்ற எழில் முதல்வன் ஆகியோருக்கு சிறப்பு நேர்வாக வாழுங்காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், மேலும், சோ.சத்தி யசீலன், மா.ரா.அரசு, பாவலர் ச.பாலசுந்தரம், க.ப.அறவாணன்.
க.த.திருநாவுக்கரசு. இரா.குமர வேலன், கவிஞர் கா.வேழ வேந்தன் ஆகிய 9 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு அவர்களின் மரபுரிமையர் களுக்கு ரூ.90 லட்சம் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 9 தமிழறிஞர்களுக்கான நூல்கள் நாட்டுடைமையாக் கப்பட்டு, விருது வழங்கப்பட் டிருக்கிறது.
கவிஞர்களுடைய குடும்பத்தாருக்கு அவர்களுடைய மரபுரிமை வாரிசுதாரர் களுக்கு இந்த விருதுகள் தலா 5.10 லட்சம் வீதம் வழங்கட் டுள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு மரி யாதை செய்யும் வகையிலும், தமிழ் மொழியை மேலும் செம்மைப்படுத்துகின்ற வகையிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி தமிழ் வளர்ச்சித் துறை இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் ந.அருள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago