ராமேசுவரத்தில் ரூ.52 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: ராமேசுவரத்​தில் அக்னி தீர்த்தம் அசுத்​த​மாவதைத் தடுக்க, ரூ.52.60 கோடி செலவில் அமைக்கப்​பட்​டுள்ள கழிவுநீர் சுத்​தி​கரிப்பு நிலையம் விரை​வில் பயன்​பாட்டுக்கு வரும் என உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்​திரன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு: ராமேசுவரம் கோயி​ல் அக்னிதீர்த்​தத்தை மக்கள் புனித​மாகக் கருதுகின்​றனர். ஆனால், அக்னி தீர்த்தம் அருகே ராமேசுவரம் நகராட்​சி​யில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் கலக்​கிறது. இதனால் கடல் அசுத்​த​மாகி வருகிறது. இதைத்தடுக்​க​வும், சரி செய்​ய​வும் கோரி அதிகாரி​களுக்கு மனு அளித்​தும் நடவடிக்கை எடுக்க​வில்லை. எனவே, அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர், கடலில் கலப்பதை தடுக்க அதிகாரி​களுக்கு உத்தரவிட வேண்​டும். இவ்வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​திகள் எம்.எஸ்​.ரமேஷ், மரியகிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. ராமேசுவரம் நகராட்சி வழக்​கறிஞர் கே.சர​வணன் ஆஜராகி வாதிடும் போது, “ராமேசுவரம் நகராட்​சிக்கு உட்பட்ட பகுதியில் வெளி​யேறும் கழிவு நீரைசுத்​தி​கரிப்​ப​தற்காக அங்குள்ள நிலப்​பகு​தி​யில் ரூ.52.60 கோடி திட்ட மதிப்​பீட்​டில் கழிவுநீர் சுத்​தி​கரிப்பு நிலையம் மற்றும் பாதாள சாக்​கடைத் திட்டம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அங்கு மின் இணைப்பு பெறப்​பட்ட பின்பு, விரை​வில் பயன்​பாட்டுக்கு கொண்டு வரப்​படும். இங்கு சுத்​தி​கரிக்​கப்​படும் தண்ணீர் பாம்பன் பகுதியிலுள்ள 300 ஏக்கர் அரசு புறம்​போக்கு நிலத்​தில் மரங்​கள், புற்கள் வளர்க்க பயன்​படுத்​தப்பட உள்ளது. மேலும் அங்கு பறவைகள் சரணாலயமும் அமைக்​கப்பட உள்ளது” என்றார். இதனைப் பதிவுசெய்த நீதிப​தி​கள், தங்களது தரப்பு ப​திலை பிர​மாணப் பத்​திரமாக ​தாக்​கல் செய்​யும்படி உத்​தர​விட்டு, ​விசா​ரணையை நவ.27-ம் தே​திக்கு தள்​ளிவைத்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்