ஓய்வூதிய இயக்குநரகத்தை மூடிய விவகாரம்: தமிழக அரசு மீது கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வூதிய இயக்குநரகத்தை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால், இனி பழைய ஓய்வூதியத் திட்டம் எந்த காலத்திலும் தமிழகத்தில் மீண்டும் வராது என கருத்து தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள், இதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் இருசக்கர மானியம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியது. தற்போது அரசு தகவல் தொகுப்பு விவர மையம், ஓய்வூதிய இயக்குநரகம், சிறு சேமிப்பு இயக்குநரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து இந்த மூன்று துறைகளுக்கும் மூடுவிழா நடத்தி அரசாணை பிறப்பித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல் நீராகியுள்ளது. முதல்வருக்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற அக்கறை இருக்குமானால் இந்த ஆணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குநரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குநரகம் கலைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படாது என்பது மிகவும் கசப்பான செய்தி. திமுக வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்ததற்கு காரணம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான்.ஆனால், இப்போது அவர்களுக்கே மிகப்பெரிய துரோகத்தை திமுக செய்திருக்கிறது.

மமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்திருப்பது, பழைய ஓய்வூதியத் திட்டம் எனும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. மறுசீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான விரோதப் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். ஓய்வூதிய இயக்குநரகத்துக்கும் மூடுவிழா நடத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்