முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசையில் தனியார் மருத்துவர்கள் அதிக இடம்

By செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் காலி பணியிடங்களை முறையாக நிரப்பாததால் அரசு மருத்துவர்கள் பின்தங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.

தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் மொத்தம் 7,971 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல் 1,000 பேரில் 68 பேர், அடுத்த ஆயிரம் பேரில் 67 பேர் உட்பட 1,025 அரசு மருத்துவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மற்ற அனைவரும் அரசுசாரா தனியார் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 3,958 பேர் இடம் பெற்று உள்ளனர். கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளது.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சுமார் 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அரசு மருத்துவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் பகுதிகளை பொருத்து ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கலந்தாய்வில் அரசுசாரா மருத்துவர்கள் (தனியார்) மற்றும் அரசு மருத்துவர்கள் பங்கேற்கலாம்.

வழக்கமாக, அரசு ஒதுக்கீடு இடங்கள் போக, பொது கலந்தாய்விலும் அரசு மருத்துவர்கள் சுமார் 50 சதவீதம் இடங்களை பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பொது கலந்தாய்வில் அரசு மருத்துவர்களால் அவ்வளவு இடங்களை பெற முடியாது. அதனால், அரசுசாரா மருத்துவர்கள் அதிக இடங்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளின் காலி பணியிடங்களுக்கு புதிதாக எம்பிபிஎஸ் மருத்துவர்களை தேர்வு செய்யாததே முக்கிய காரணம். அதனால், ஆண்டுதோறும் புதிய மருத்துவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு தேர்வு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்