மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 5,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர் திறப்பை விட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 106.19 அடியில் இருந்து 106.51 அடியாகவும், நீர் இருப்பு 73.09 டிஎம்சியில் இருந்து 73.53 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்