தமிழகத்தில் மருத்துவமனைகள் இருக்கு... போதிய மருத்துவர்கள் இல்லை!

By சி.கண்ணன்

மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனைகள், மாவட்ட தலைமை மருத்​துவ​மனைகள், வட்டார மருத்​துவ​மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்​துவ​மனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்​கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்​துவ​மனை​களில் சுமார் 20 ஆயிரம் மருத்​துவர் பணியிடங்கள் மட்டுமே உள்ளது. அதிலும், சுமார் 4 ஆயிரம் பேர் பற்றாக்​குறை. செவிலியர்​களும் போதிய எண்ணிக்கையில் இல்லை.

இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்​சைகள் கிடைக்​காமல் மக்கள் அவதிக்​குள்ளாகி வருகின்​றனர். இதர பணியாளர்​களுக்கும் பஞ்சமாக இருப்​பதால் அரசு மருத்​துவ​மனைகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்​கின்றன. அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடத்திய தமிழக சுகாதா​ரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அரசு மருத்​துவ​மனை​களில் இருக்கும் சுகாதா​ரமற்ற கழிப்​பறைகள், கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட அனைத்து குறைபாடு​களையும் சரிசெய்​யுமாறு அனைத்து அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​களின் டீன்களுக்கு உத்தர​விட்​டார்.

தொடர்ந்து, அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​களில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவின் தரம் ஆகியவற்றை மாதம் ஒருமுறை கண்காணித்து அறிக்கை சமர்ப்​பிக்​கவும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு அறிவுறுத்​தினார். சுகாதா​ரத்​துறையின் இந்த நடவடிக்கையை அரசு மருத்​துவர்கள் வரவேற்றுள்​ளனர்.

இதுதொடர்பாக அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப்​போராட்டக் குழு தலைவர் மருத்​துவர் எஸ்.பெருமாள் பிள்ளை​யிடம் கேட்டபோது, “தமிழகத்தில் புதிதாக அரசு மருத்​துவ​மனை​களும், கூடுதல் கட்டிடங்​களும் கட்டப்​பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு​களுக்கு மேலாக புதிதாக மருத்​துவர் பணியிடங்கள் உருவாக்​கப்​பட​வில்லை. 10 ஆண்டு​களில் அரசு மருத்​துவ​மனை​களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து​விட்டது. அதற்கு ஏற்ப மருத்​துவர், செவிலியர், இதர பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

தற்போது தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்​களில் 2 ஆயிரத்​துக்கும் மேற்பட்ட மருத்​துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 850 மகப்பேறு மருத்​துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் குறைவான அளவே மருத்​துவர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனை​களில் தினமும் சுமார் 2 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகிறது. அதனால், அங்கு மகப்பேறு மருத்​துவர் பணியிடங்களை 2 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, மருத்​துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை தொடர்பாக அண்மையில் பேட்டியளித்த சுகாதா​ரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கரோனா காலத்தில் 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்​படையில் நியமிக்​கப்​பட்​டனர். அவர்களில் 1,271 பேர் காலியாக உள்ள நிரந்தர செவிலியர் பணியிடங்​களில் நியமிக்​கப்​பட​வுள்​ளனர்.

காலியாக உள்ள 2,553 மருத்​துவர் பணியிடங்களை நிரப்ப 24 ஆயிரம் மருத்​துவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் தேர்வு ஜனவரி 27-ல் நடைபெறவுள்ளது. அதேபோல் 1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 2,250 கிராம சுகாதார பணியிடங்​களும் விரைவில் நிரப்​பப்​பட​வுள்ளன” என்றார்.

சாமானியர்​களுக்கும் தரமான மருத்​துவம் கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் அரசு மருத்​துவ​மனை​களின் தரத்தை உயர்த்தி வரு​கிறது அரசு. அப்படி இருக்கை​யில், மருத்​துவர்கள்​ உள்​ளிட்ட பணி​யாளர்கள்​ பற்​றாக்​குறை​யால் அந்த நோக்கம்​ சிதைந்​து​விடக் கூடாது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்