“இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார் இபிஎஸ்” - உதயநிதி விமர்சனம்

By கி.கணேஷ்

சென்னை: ‘‘சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும், அதிமுக கட்சியையே பழனிசாமி பாஜகவுடன் இணைத்துவிடுவார்’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சுங்கச்சாவடி தங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எளியோர் எழுச்சி நாள் விழாவில் 48 ஜோடிகளுக்கு திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். அத்துடன் சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமக்களுக்கு மாலை வழங்கும்போது சிலர், அவர்களே மாலையை எடுத்து அணிந்து கொண்டனர். மணமகன் ஒருவர் அவசரத்திலா அல்லது பதற்றத்திலா என்று தெரியவில்லை தாலி எடுத்து அவரே கட்டிக்கொண்டார். அது தவறு கிடையாது. பெண்கள்தான் தாலி கட்டியிருக்க வேண்டும் என்று கிடையாது, தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுதான்.

திருமணத்தைப் பொறுத்தவரை, இது சுயமரியாதை முறையில் நடந்து கொண்டிருக்கும் திருமணமாகும். இந்த சுயமரியாதை திருமண முறைக்கு ஒருகாலத்தில் சட்ட அங்கீகாரம் கிடையாது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோதுதான். இப்போதெல்லாம் இதுபோன்ற திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமாக நடக்கிறது. இது தான், தமிழகத்தில் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் பண்பாட்டுப் புரட்சி.

இதனால் தான் நம் மீது ஆரியர்களுக்கும், ஆரிய அடிமைகளுக்கும் அடங்காத வயிற்றெரிச்சலும், கோபமும் வருகிறது. அவர்களுடைய கோபத்தைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. தமிழர்களின் வாழ்வு உலகளவில் சிறந்து விளங்க வேண்டும். இது தான், திராவிட இயக்கத்தின் கொள்கை. இதன் அடிப்படையில் தான், நமது திராவிட மாடல் அரசின் முதல்வர் பலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

மகளிருக்கு விடியல் பயணத்திட்டம், புதுமணப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை குறித்து நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சிகள் இன்றைக்கு கலங்கிப் போய் இருக்கின்றனர். எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமிக்கு நம் திட்டங்களை பார்த்து கோபம் வருகிறது.

மக்கள் எல்லாரும் நம்முடைய திட்டங்களை கொண்டாடுகின்றனர். முதல்வரை வாழ்த்துகின்றனர். அரசின் திட்டங்களுக்கு 94 வயது வரை தமிழக மக்களுக்காக உழைத்த கருணாநிதி பேரை சூட்டாமல், வேறு யார் பேரை சூட்ட வேண்டும்? முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டினால் கூட பழனிசாமி ஒப்புக் கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா பெயரை வைக்கலாம்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் எந்த நேரத்திலேயும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார். சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கு ஐடி ரெய்டு நடந்தது.அடுத்த நாளே கூட்டணி குறித்து தேர்தல் நெருக்கத்தில் பேசலாம் என்றார். இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும். அதிமுக கட்சியையே பாஜகவுடன் இணைத்தாலும், இணைத்து விடுவார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கழக அணி வெல்ல வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அதற்கு உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் உழைக்க வேண்டும். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். இலக்கு 200 என்பதை மனதில் ஏந்தி, ஒவ்வொரு வாக்காளரையும், தேர்தலுக்கு முன்பாக 4 அல்லது 5 முறையாவது சந்தித்து நமது திட்டங்கள் குறித்து பேச வேண்டும். அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம். 7 ஆவது முறையாக கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு மற்றும் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்