எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: பூச்சிக்கொல்லி நிறுவனத்துக்கு ‘சீல்’

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அருகே குன்​றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதி​யைச் சேர்ந்​தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்​தரேசன் (1) ஆகியோ​ருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்​றத்​தூரில் உள்ள தனியார் வங்கி​யில் மேலா​ளராக பணிபுரிந்து வருகிறார்.

குழந்தை வைஷாலினி, அதே பகுதி​யில் உள்ள தனியார் பள்ளி​யில் யுகேஜி படித்து வந்தார். வீட்​டில் எலி தொந்​தரவு அதிகமாக இருந்​த​தால், எலிகளை கட்டுப்​படுத்து ​வதற்காக சென்னை தியாகராய நகரில் செயல்​பட்டு வரும் பூச்​சிக்கொல்லி நிறு​வனத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரி​வித்​துள்ளார்.

அண்மை​யில் அவரது வீட்டுக்கு வந்த 2 பேர் வீட்​டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்து​விட்டு, வீடு முழு​வதும் எலிகள் வராமல் இருக்க மருந்து அடித்​துள்ளனர். மருந்​திலிருந்து பரவிய நெடி​யால் அனைவருக்​கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்​டுள்​ளது. இரண்டு குழந்தை​களும் மருத்​துவ​மனைக்கு செல்​லும் வழியிலேயே உயிரிழந்தன. பெற்​றோர் போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தியதை தொடர்ந்து, வேளாண்​துறை அதிகாரிகள் விதி​முறை மீறி செயல்​பட்​ட​தால், அந்த தனியார் நிறு​வனத்​தின் உரிமத்தை தற்​காலிகமாக ரத்து செய்​தனர். தொடர்ந்து, நேற்று அந்​நிறு​வனத்​துக்கு சீல்​ வைத்​தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்