ராமேசுவரம்: 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

பாம்பனில் 1846ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த கலங்கரை விளக்கத்திற்கு மீன் எண்ணெய்யும், தாவர எண்ணெயும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1923 ஆம் ஆண்டு பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொறுத்தப்பட்டன.

பாம்பன் கலங்கரை விளக்ககத்தில் 106 படிகள் உள்ளன. 100 அடி உயரமும் 9 நொடிக்கு ஒருமுறை வெளிச்சத்தை உமிழும் சக்திவாய்ந்த 1000 கேண்டில் சக்தியுள்ள விளக்கை கொண்டது. இதன் சுழல் விளக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒளி தரக் கூடிய ஆற்றல் பெற்றது. இந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தினை கரையில் இருந்து 14 நாட்டிகல் மைல் தொலைவு வரையிலும் பார்க்க முடியும். கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் பெற்று பாம்பன் கலங்கரை விளக்கத்தை பார்வையிடுவதற்கு அனுமதித்து வந்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு கலங்கரை விளக்கத்தை பார்வையாளர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 65 கலங்கரை விளக்கங்களிலும், தமிழகத்தில் 11 கலங்கரை விளக்கங்களிலும் பார்வையிடுவதற்கு சுற்றுலா திட்டத்துக்காக மத்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. 2021 பிப்ரவரியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும், கடந்த ஆண்டு புதியதாக கட்டப்பட்ட தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கம் வளாகத்தில் சிறுவர் விளையாடும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் கலங்கரை விளக்கத்தை காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை திங்கட்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் மதியம் 2 மணியிலிந்து மாலை 5 மணி வரையிலும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை பார்வையிடுவதற்கு சிறியவர்களுக்கு ரூ. 5, கட்டணமும், பெரியவர்களுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு தனி கட்டணம்.

பாம்பன் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து சில்லென்று வீசும் கடல் காற்றுடன் மேற்கே பாம்பன் சாலை பாலம், ரயில் பாலம், மண்டபத்தையும், கிழக்கே ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் கெந்தமாதன ராமர் கோயிலையும், தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், வடக்கே பாக்ஜலசந்தி கடல் பகுதியையும் பாம்பன் தீவின் இயற்கை அழகையும், கோரி தீவு, குருசடை உள்ளிட்ட குட்டி தீவுகளையும் பார்த்து ரசித்திட முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்