போலி கல்வி சான்று மூலம் ரூ.10 கோடி மோசடி: ஆர்டிஓ உட்பட 17 பேர் மீது வழக்கு- மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை

By என்.சன்னாசி

போலி கல்விச் சான்றிதழ் மூலம் பேட்ஜ் வழங்கி ரூ.10 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உட்பட 17 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போலி கல்விச் சான்றிதழ் மூலம் பேட்ஜ் (வாடகை, கனரக வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி வில்லை) வழங்கப்படுவதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு செந்தில்கண்ணன் என்பவர் 2016-ம் ஆண்டு புகார் தெரிவித்திருந்தார். அதில், “வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2015-2016ம் ஆண்டு காலகட்டத்தில் போலி கல்விச் சான்றிதழ் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு 6,777 பேருக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு, சட்டவிரோதமாக ரூ.10.16 கோடி வருவாய் ஈட்டிய அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.

அப்போது, மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போலி கல்விச் சான்றிதழ் அடிப்படையில் 2015-ல் 287 பேருக்கும், 2016-ல் 425 பேருக்கும் பேட்ஜ் வழங்கியது தெரியவந்தது. பேட்ஜ் பெறுவதற்காக வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழை போலீஸார் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராயாமல் பேட்ஜ் வழங்கி உள்ளனர். இந்த மோசடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், பள்ளி நிர்வாகி ஆகியோர் கூட்டாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே. கல்யாணகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெ.பூர்ணலதா, ஏ.கே.முருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தனி உதவியாளர் எல்.ரேமண்ட், அலுவலகக் கண்காணிப்பாளர் என்.புவனேஸ்வரி, இளநிலை உதவியாளர் எஸ்.சுப்பிரமணியன், மதுரை அழகப்பா நகர் டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியின் முதல்வர் கே.மணிகண்டன், ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த எம்.செந்தில்குமார், ஜி.ராஜா, கே.ஜெயகுமார், எஸ்.பாண்டியராஜன், வி.இளங்கோவன், ஆர்.முருகேசன், என்.நாகூர்கனி, எஸ்.அப்துல் மாலிக், ஆர்.ராஜா, ஜெ.நாகராஜ்பிரசாத் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்