மதுரை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தாமதமாகி வருவதால் திமுக வழக்கறிஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மதுரையில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த 14 மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வழக்குகள் மதுரை அமர்வில் தாக்கலாகி வருகின்றன. இந்த வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உரிமையியல், குற்றவியல் பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திறமையின்மை உட்பட பல்வேறு காரணங்களால் 8 அரசு வழக்கறிஞர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். 21 அரசு வழக்கறிஞர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதனால் அரசு வழக்கறிஞர்களின் எண் ணிக்கை குறைந்தது. அரசு வழக்கறிஞர்கள் காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் பெறப்பட்டன. திமுக வழக்கறிஞர்கள் பலர் அரசு வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இருப்பினும் விண்ணப்பித்து நூறு நாட்கள் கடந்தும் இன்னும் புதிய அரசு வழக் கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு துறைகள் சார்ந்த வழக்குகள் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் தேக்கமடைவது உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு வழக்கறிஞர்கள் பற்றாக்குறை தொடர்பாக, மதுரை அமர்வு நீதிபதிகள் பலமுறை அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இருப் பினும் நியமனம் தாமதமாகி வருகிறது. திமுக அரசு பதவி காலம் முடிய ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படாமல் இருப்பது அக்கட்சி வழக்கறிஞர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது: அரசு வழக் கறிஞர்கள் பற்றாக்குறையால் உயர் நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகள் முடியாமல் உள் ளன. அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தாமதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவும் கோஷ்டி பூசல்தான் காரணம். அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு ஏராளமான திமுக வழக்கறிஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். பதவியை பெற கட்சி நிர்வாகிகளை சுற்றி வருகின்றனர்.
போதுமான எண்ணிக்கையில் அரசு வழக்கறிஞர்கள் இல்லா ததால் அரசு வழக்குகள் தேக்க மாகின்றன. அரசுக்கு எதிரான உத்தரவுகள் வருவது, அரசுக்கு நிதியிழப்பு போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதனால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago