‘நலமுடன் இருக்கிறேன்’ - தாக்குதலுக்கு உள்ளான சென்னை அரசு மருத்துவர் பாலாஜி அமைச்சரிடம் விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இளைஞரின் தாக்குதலால் படுகாயமடைந்த சென்னை அரசு மருத்துவர் பாலாஜி, ‘நான் நலமுடன் இருக்கிறேன்.’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தன் உடல்நிலை பற்றி விவரித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை இன்று (நவ.14) காலை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அமைச்சர், எப்படி இருக்கிறீர்கள் பாலாஜி? எனக் கேட்க, கையில் இருக்கும் உணவை உட்கொண்டு காட்டி, ‘இதோ நன்றாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். மருத்துவர் பாலாஜியின் கைகளைக் குலுக்கி அமைச்சர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் பாலாஜி, “நான் நலமுடன் உள்ளேன். தலைக்காயங்களுக்கு தையல் போட்டுள்ளனர். ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுத்துள்ளனர். எனக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் நிலை என்னவென்று சோதனை செய்துள்ளனர். இசிஜி எடுத்துள்ளனர். இன்னும் பல பரிசோதனைகளும் செய்துள்ளனர்” என்று தனது நலம் பற்றியும், தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் கூறியுள்ளார்.

அமைச்சர் சந்திப்பின் போது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பார்த்தசாரதி, மற்றும் சில மருத்துவர்களும் உடன் இருந்தனர்.

நடந்தது என்ன? சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் (25). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரேமா வலியால் துடித்து அவதிப்பட்டுள்ளார். இதை பார்த்து வேதனை அடைந்த அவரது மகன் விக்னேஷ், நேற்று காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.

அங்கு அறையின் கதவை மூடிவிட்டு, "எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை" எனக்கேட்டு விக்னேஷ் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி) எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்த சக மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள் அலறினர். ஆனால், மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் எவ்வித பதற்றமும், பயமும் இல்லாமல், கத்தியை அங்கேயே போட்டுவிட்டு மருத்துவமனை யில் இருந்து வெளியே செல்ல முயன்றார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அடையாள வேலை நிறுத்த போராட்டம்: இதற்கிடையில், மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்