சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற அவரை பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் (25). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரேமா வலியால் துடித்து அவதிப்பட்டுள்ளார். இதை பார்த்து வேதனை அடைந்த அவரது மகன் விக்னேஷ், நேற்று காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.
அங்கு அறையின் கதவை மூடிவிட்டு, "எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை" எனக்கேட்டு விக்னேஷ் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி) எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த சக மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள் அலறினர். ஆனால், மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் எவ்வித பதற்றமும், பயமும் இல்லாமல், கத்தியை அங்கேயே போட்டுவிட்டு மருத்துவமனை யில் இருந்து வெளியே செல்ல முயன்றார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
» வீ.கே.டி.பாலன்: எளியோருக்காக வாழ்ந்த மனிதநேயர்
» பவுர்ணமி, வார கடைசி நாட்களில் சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள்
இதற்கிடையில், மருத்துவர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவர் மீதும் தாக்குதல்: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரிஹரன் (49). இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று புறநோயாளி பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு நீலாங்கரை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பரத் (24) என்பவர் புறநோயாளியாக சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது மருத்துவர் ஹரிஹரனுக்கும், பரத்துக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே, ஹரிஹரனை பரத் கையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் பாலாஜி, வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பரத் ஏற்கெனவே இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஒரு மாதம் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற இளைஞரை மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago