“கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்” - முத்தரசன் கருத்து

By அ.சாதிக் பாட்சா


திருச்சி: கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழாவும் வரும் டிசம்பர் 26ம் தேதி அன்று தொடங்குகிறது. அதனை சிறப்பாக கொண்டாட உள்ளோம்.

கோவை ஈஷா மையத்தில் யோகா கற்று தருவதாக கூறி வசதிப்படைத்த பெண் பிள்ளைகள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு மூளை சலவை செய்து, மொட்டை அடிக்கப்படுகிறது. குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறார்கள். யோகா கற்று தருவதாக கூறும் ஈஷா மையத்தில், தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஈஷா மையத்தின் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.

ஈஷா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவ.23ம் தேதி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தொடர்ந்து செய்து வருகிறது. பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகிறது. திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் விமான நிலையம் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை. திருவனந்தபுரம் விமான நிலையம் அதானிக்கு விற்கப்பட்டதால் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய அரசு தனியார் மய கொள்கையை கைவிட வேண்டும். இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.

மொட்டை அடித்து சித்தரவதை செய்யப்படுகிறார்கள். மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மத்திய அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு.

பூண்டு, வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருவதை மாநில அரசு கவனத்தில் கொண்டு அரசே பூண்டு, வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுப்பட வேண்டும் என்பதை நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம். அதற்கான முயற்சி ஏற்கெனவே நடந்து வருகிறது, தொடர்ந்து நடக்கும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டணி தொடர்பாக பாஜகவுக்கும் துண்டு போட்டு வைத்துள்ளார். பழனிசாமி கருத்தை தமிழிசை வரவேற்திருப்பதன் மூலம் அவர்கள் ஒத்த கருத்தில் இருப்பது தெரிகிறது. ஆளுங்கட்சி மேல் தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அதிருப்தி இருக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள்.

பாசிச பாஜக தமிழகத்தில் காலூன்றக் கூடாது என்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துவோம். உலகில் சிறந்த கொள்கை சோசலிசம். அதை தவிர்த்து விஜய் பேசுகிறார் என்றால் அவருக்கு அறிவுரை கூறுங்கள் சோசலிசத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிய வையுங்கள், என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்