மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியது யார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்தவர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமைச்சர் ஆய்வு: இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பிடிபட்ட நபர் சொன்னது என்ன? பின்னர் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் குறித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை இயக்குநர் அளித்த பேட்டியில், “இந்த தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டுள்ள நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால், இந்த மருத்துவமனையில் 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், நுரையீரல் பாதிப்பு இருந்ததால், தனது தாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த மருத்துவமனையில் என்ன கூறினார்கள் என்று தெரியவில்லை. தனியார் மருத்துவமனையில் கூறியது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விவாதிக்க வந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் இருவருக்குள் என்ன விவாதம் நடந்தது என்பது, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கூறினால்தான் தெரியவரும். மருத்துவர் பாலாஜியின் அறையில்தான், அவருடைய அறையை மூடிவிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதிகமான ரத்தம் வெளியேறியது: மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்பகுதி, நெற்றி, முதுகு மற்றும் தலையில் இரண்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறது. மருத்துவரின் வயிற்றில் கத்திக்குத்து எதுவும் இல்லை. மற்ற காயங்களில் எல்லாம் ரத்தம் அதிகமாக வெளியேறியிருந்தது. மருத்துவர் ஏற்கெனவே ஒரு இதய நோயாளி. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அசிட்டோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், சாதாரண காயங்கள் ஏற்பட்டாலே ரத்தம் வடிதல் அதிகமாக இருக்கும்.

7 இடங்களில் கத்திக்குத்து: இந்த தாக்குதலில் அவருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போதைக்கு அவர் மயக்க நிலையில் இருந்தாலும், அவர் நன்றாக இருக்கிறார். மொத்தம் 7 இடங்களில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.” என்று அவர் கூறினார்.

தவறான புரிதலே தாக்குதலுக்கு காரணம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த மருத்துவமனைக்கு அருகில்தான் கிண்டி காவல் நிலையம் இருக்கிறது. 24 மணி நேரமும் இங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2000-க்கும் அதிகமான நோயாளிகள் இங்கு தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். புறநோயாளிகளுக்கான சீட்டு இல்லாமல் மருத்துவரை வந்து பார்க்க முடியாது. தாக்குதல் நடத்திய நபரின் தாய்க்கு இங்கு ஹீமோதெரபி சிகிச்சை கொடுத்துள்ளதால், அந்த நபர் இங்கு ஏற்கெனவே வந்திருக்கிறார். அந்த நபரை இங்குள்ளவர்களுக்கு தெரிந்திருந்ததால், மருத்துவரை சென்று பார்த்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவருக்கு தவறானது புரிதல் ஏற்பட்டிருக்கிறது. விக்னேஷின் தாய்க்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தவறு என்று யாரோ அவரிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், கோபமடைந்த நபர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மருத்துவர் பாலாஜி தற்போது உயிர் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார், என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்