‘கண்டா வரச் சொல்லுங்க...’ - எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி யாகசம் கேட்டு மதுரையில் போராட்டம்

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் பட்டியல் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கக் கோரி காட்டுநாயக்கன் சமூகத்தினர் யாகசம் கேட்டு நூதனப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ‘கண்டா வரச் சொல்லுங்க ’ என்ற பாடலை பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.

மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பட்டியல் பழங்குடியினர் (ST) இந்து காட்டு நாயக்கன் என்று சாதி சான்றிதழ் வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், மதுரையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பெற்றோர்களுடன் 6-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

போராட்டத்தின்போது, தங்களது தொழிலுக்கு பயன்படுத்தும் வலைகள், கூண்டுகளை வைத்தபடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட , அவர்களது பெற்றோர் தட்டை ஏந்தி யாசகம் பெற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், மாணவர்கள் , ‘கண்டா வரச்சொலுங்க, ஆர்.டி.ஓவை கண்டா வரச்சொல்லுங்க ’ என கர்ணன் திரைப் பாடலை பாடியும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வெளிப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்