சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முக்கிய நாட்களில் டிக்கெட் விரைவாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்துவிடுகிறது. எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், 16 பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே வணிகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
» ‘அதிக விலைக்கு மது விற்றால் இடைநீக்கம்’ - சுற்றறிக்கைக்கு டாஸ்மாக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
» மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதையடுத்து, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago