தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

By செய்திப்பிரிவு

நாகை: தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இன்று (நவ.12) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (நவ.12) நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்துச் சென்றனர்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 10-ம் தேதி டாடா நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்வநாதன் (40 ) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உட்பட 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று (நவ.12) அதிகாலை 4 மணியளவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி அவர்களை படகுடன் சிறைப்பிடித்து அழைத்துச் சென்றனர்.

அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன்கள் செல்வநாதன் (40), விஜயநாதன் (37), கண்ணன் மகன் சதன் (26), பழனியாண்டி மகன் ஆறுமுகம் (51) திடீர் குப்பத்தைச் சேர்ந்த காத்தான் மகன் குழந்தைவேல் (57), ராஜதுரை மகன் பாக்கியராஜ் (43), தமிழ் தான் பேட்டை சாமந்தான் பேட்டை பெருமசாமி மகன் செந்தில், ஆனந்தவேல், மாதவன், நாகூர் மாரியப்பன் மகன் இனியவன் (30), கூழையார் சரவணன் (41) ஆகிய 12 பேரையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

கடந்த சில நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 485-க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 65-க்கும் அதிகமான படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பெரும் அபராதத் தொகைகளை இலங்கை நீதிமன்றங்கள் விதிக்கின்றன. மேலும், மாதக் கணக்கில் மீனவர்கள் சிறையில் இருக்க நேரிடுகிறது. இதனால், வாழ்வாதாரங்களை இழந்து கைதாகும் மீனவர்களின் குடும்பங்கள் தவிக்கும் சூழல் நிலவுவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல், இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கோரி தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்