தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

By கி.கணேஷ்

சென்னை: மனித வள மேம்பாட்டுத் துறை செயலராக சமயமூர்த்தி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக அதுல் ஆனந்த் என 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாஹூவுக்கு பதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலராக இருந்த அர்ச்சனா பட்நாயக், புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, சில ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பு: சுற்றுலாத் துறை ஆணையராக இருந்த சி.சமயமூர்த்தி, மனித வள மேம்பாட்டுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குனராகவும் செயல்படுவார்.

தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், குறு, சிறு, நடுத்தரத்தொழில்கள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாஹூ, ஏற்கெனவே கூடுதலாக கவனித்து வந்த கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குனர் எம்.ஆர்த்தி, துணை முதல்வரின் துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் ஏ.அருண் தம்புராஜ், தேசிய சுகாதார இயக்க இயக்குனராக நியமிக்கப்பட்டு்ளார். அவர் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார், என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்பார் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்