தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது: பிரேமலதா கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல், டிசம்பர் பருவமழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல், சொத்து வரி, மின்கட்டண உயர்வை திரும்ப பெறுதல், காவிரி தண்ணீர் பிரச்சினைக்கு ராசிமணலில் அணை கட்டுதல் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவும், மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும்.

அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை அந்த கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறி தான். விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து.

அதேபோல் ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்