நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள், பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள நாகப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினித் (21). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் கல்லூரி நண்பர்களான தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (21), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேக்பஷ்ரூல் சாதிக் (21) ஆகிய இருவரும் வந்துள்ளனர். பின் மாலையில் நாகப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக 3 பேரும் சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வினித்தின் அம்மா ஆற்றிற்கு சென்று தேடியுள்ளார். எனினும் அவர்களது செல்போன் மற்றும் காலணிகள் மட்டும் ஆற்றின் கரையோரத்தில் கிடந்தன, அவர்களை காணவில்லை. இதுகுறித்து அவர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

தொடர்ந்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் மற்றும் மத்திய அமைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்கள் மூன்று பேரையும் காவிரி ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் வினித் மற்றும் நந்தகுமார் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாயமான ஆந்திராவை சேர்ந்த மாணவர் சேக்பஷ்ரூல் சாதிக் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஜேடர்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்