விசிக கட்சியில் விரைவில் சீரமைப்பு பணி: திருமாவளவன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: விசிக மறுசீரமைப்பு பணிகள் ஒருவாரத்தில் தீவிரப்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓரிருவர் மட்டுமே வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பொருளாதாரத்தை மட்டுமல்ல இந்தியாவின் அரசியலையே அவர்கள் தீர்மானிக் கின்றனர். இது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.

தேர்தல் அடிப்படையிலான நில எல்லையை வரையறையாகக் கொண்டு கட்சி இயங்குவதுதான் சரி என்ற அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். இதை நீண்ட காலமாக விவாதித்து, கட்சியினரை தயார் செய்து, அனைவரது ஒப்புதலோடு நடைமுறைப்படுத்த உள்ளோம். இது வேர் அளவில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சி.

இதன் மூலம் மக்களை எளிதாகச் சென்று சேரவும், தேர்தல் காலத்தில் பணியாற்றவும் நிர்வாகிகளுக்கு இலகுவாக இருக்கும். இப்பணிகள் ஒரு வாரத்தில் தீவிரப்படுத்தப்படும். அம்பேத்கர் நினைவு நாள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் குறித்து ஏற்பாட்டாளர்கள் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்