சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) 31-வது ஆண்டு விழா, அதன் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, என்ஐஒடி சார்பில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடல்சார் நுண்ணுயிர் நிலையத்தை காணொலி மூலம் திறந்துவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சரக்கு கப்பல்கள் புறப்படும் நாடுகளில், நிலைத்தன்மைக்காக அதில் நீர் நிரப்புவது வழக்கம். இந்திய துறைமுகங்களை வந்தடைந்து, இங்கு சரக்குகளை இறக்கிய பிறகு, அந்த நீரையும் வெளியேற்றுவார்கள். இதனால், அந்தநாடுகளில் உள்ள கடல் உயிரினங்கள், நுண்ணுயிர்கள் இங்கு வளரத்தொடங்கும். சில நேரம், அவை இங்குள்ள உயிரினங்களை அழித்துவிடலாம். அவ்வாறு கப்பல்களில் இருந்து வெளியேற்றும் நீரை சுத்திகரித்து, ஆபத்தான நுண்ணுயிர்களை அழிக்கும் நிலையம் திருப்பதிமாவட்ட கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வளிமண்டல வெப்பம் மட்டுமின்றி, தற்போது கடலின் வெப்பமும் அதிகரித்து வருகிறது. ஆழ்கடலும் வெப்பமடைகிறது. அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதற்காக 10 நாட்களுக்கு ஒருமுறை கடலில் 2 கி.மீ. ஆழம் வரை நிலவும் வெப்பநிலை உள்ளிட்ட தரவுகளை சேகரித்து வருகிறோம்.
கோடையில் நிலப்பரப்பில் வெப்ப அலை நிலவுவதுபோல, கடலிலும் வெப்ப அலை உருவாகி வருகிறது. அப்பகுதிகளில் மீன்கள் வசிக்காது. பவளப் பாறைகள் அழிந்துபோகும். அதை மீண்டும் உருவாக்க பல ஆண்டுகள் ஆகும்.இதுபோன்ற வெப்ப அலை பகுதிகளை கடக்கும் புயல்கள் மேலும் வலுவாகிவிடும். எப்போதாவது நிகழ்ந்த கடல் வெப்ப அலை,இப்போது அடிக்கடி உருவாகிறது. இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், வானிலை முன்னறிவிப்பு போல, கடல் வெப்ப அலை குறித்த முன்னறிவிப்புகளையும் வழங்கநடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடலில் 6 கி.மீ. ஆழம் வரை சென்று ஆய்வு மேற்கொள்ள ‘சமுத்ராயன்’ என்ற கடல் கலத்தை உருவாக்கி வருகிறோம். இது அடுத்த ஆண்டு முழு பயன்பாட்டுக்கு வரும்.இதுபோன்ற ஆய்வுக்காக ஒருசிலநாடுகள் மட்டுமே கடல் கலத்தை உருவாக்கியுள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
முன்பெல்லாம் நீரை தேக்கி வைத்திருக்கும் மேக கூட்டங்கள் அடர்த்தி குறைவாகவும், 100 கி.மீ. தூரத்துக்கு மேல் பரவலாகவும் இருக்கும். வெப்பநிலை உயர்வால், அதிக அளவு நீரை மேகங்கள் தேக்கிவைத்துக் கொள்கின்றன. இதனால், அடர்த்தி அதிகரித்து, பரப்பு குறைந்துள்ளது. இதன்காரணமாகவே, ஒரே இடத்தில்சிறிது நேரத்துக்குள் அதிகனமழையாக கொட்டிவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago