முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகன் மாயமான நிலையில், அவர் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை பத்மினி. பத்மினியின் மகளான துர்கா வைஷ்ணவி திருப்பூரில் உள்ள சிவமூர்த்தி (47) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சிவமூர்த்தி ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி வீட்டில் கோவைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சிவமூர்த்தி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், அவரது சடலத்தை வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குளத்தில் போலீஸார் இன்று (புதன்கிழமை) காலை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, திருப்பூரை சேர்ந்த விமல் (35), கோவை காரமடையைச் சேர்ந்த மூர்த்தி (37), கவுதம் (22), மணிபாரதி (22) ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் யார், சிவமூர்த்தி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
13 hours ago