கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி 2 விரைவில் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கூறினார்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில், ரூ.2.16 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள், ரூ.13 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கே.எம்.சரயு, எம்எல்ஏ மதியழகன் முன்னிலை வகித்தனர்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்தும், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்வழங்கியும் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 20 ஆயிரம் சாலைகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் பகுதியை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
» வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
» சென்னையில் 2 நாள் நடக்கிறது சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 3,827 வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.2 ஆயிரம் கோடியில் பழுதடைந்த 2 லட்சம் தொகுப்பு வீடுகளை பழுது பார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 13,455 மாணவ,மாணவிகளுக்கு ரூ.6.48 கோடியில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் (பொ) பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் (பொ) முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago