கரூர்: மனைவி, மகளை கொலை செய்த தொழிலாளி, தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்தவர் செல்வகணேஷ்(45). இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி கல்பனா(38), மகள் சாரதி பாலா(5) ஆகியோருடன் வசித்து வந்தார். தற்போது கல்பனா கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்வகணேஷ் வீட்டில் இருந்து நேற்று அதிகாலை அலறல் சப்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டில் கல்பனா, சாரதி பாலா ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். செல்வகணேஷ் மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு சென்று செல்வகணேஷை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கல்பனா, சாரதிபாலா உடல்களை, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
» கேப்டன் அசலங்கா பொறுப்பான ஆட்டம்: முதல் டி20-யில் நியூஸிலாந்தை வீழ்த்திய இலங்கை!
» மகாராஷ்டிராவில் அனைத்து மசூதிகளிலும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்: ராஜ் தாக்கரே
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மனைவி, மகளை செல்வகணேஷ் எதற்காக கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago