மதுரை: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது’’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. பகுதி செயலாளரும், மாவட்ட இளைஞர் அணி செயலாளருமான வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வைத்தார். புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு மக்கள் மத்தியில் நிறைவேற்றப்பட்டது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார். திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால்தான் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது.
அதனால், கள ஆய்வு என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதிமுகவோடு கூட்டணி சேர பல கட்சி தயாராகி வருகிறது. அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடிக்கும். அதனால், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு முன் வீடு வீடாக திமுகவின் பொய் பிரச்சாரங்களை எடுத்துக் கூறி பொதுமக்களையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும்” என்றார். பெரிய புள்ளான் எம்.எல்.ஏ, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், அவைத் தலைவரே எஸ்.என். ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago