சென்னை: “பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன்,” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
திரைத் துறையில் ‘டப்பிங்’ சங்கப் பிரச்சினை தொடர்பாக, இன்று (நவ.8) தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனை, நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து மனு அளித்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “அமைச்சரை சந்தித்து, டப்பிங் சங்கம் தொடர்பாக கோரிக்கை விடுத்தோம். நடிகர் ராதாரவி தலைமையில் இயங்கும் சங்கத்தில் அவ்வபோது விதிகளை மாற்றி வருகின்றனர். இதனால், வேறு சங்கத்தில் இருப்பவர்கள் இந்த சங்கத்தில் இயங்க முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டபோது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக எந்த வித சலுகையும் அனுபவிக்காமல் நலிந்த பிராமணர்கள் இங்கு உள்ளனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் அந்தணர் நலவாரியம் என்று உள்ளது. அந்த வாரியத்துக்கு ரூ.100 கோடி வரை ஒதுக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருக்க வீட்டுவசதி செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பிராமணர் பிரதிநிதி யாரும் இல்லை. அந்தணர் முன்னேற்ற வாரியம் அமைத்தால் 10 லட்சம் பேர் பயனடைவார்கள்.
நடிகை கஸ்துாரி பேசியது மிகப் பெரிய தவறு. கோரிக்கை வைப்பவர்கள் தனக்கு என்ன வேண்டும் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை கை காட்டி பல விஷயங்களை பேசக்கூடாது. ஒரு சமுதாய கூட்டத்தில் அரசியல் பேசுவது, நல்லதல்ல. தமிழகத்தில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கவில்லை. சலுகைகள் கிடைக்கவில்லை; ஆனால் இனப்பெடுகொலை இல்லை. மாறாக பாஜவில்தான் நடக்கிறது. அதனால் நான் பாஜகவில் இருந்து விலகிவிட்டேன். 10 ஆண்டு பாஜகவில் இருந்து பட்டபாடு போதும். தேவையில்லாத சாயத்தை முகத்தில் பூசிக் கொண்டிருக்க வேண்டாம். எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை. கட்சிக்குதான் நான் தேவை. மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் சேர்த்தால் 50 ஆண்டுகள் ஆனாலும் இங்கு ஆட்சிக்கு வரமுடியாது.
தமிழக அரசியல் மட்டுமல்லாது, தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலை இருக்க முடியாது. 10 ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லை என்பதற்காக, பாஜக எடுக்கும் படத்தில் நடிக்க முடியுமா? பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன். இதில் எந்த தப்பும் இல்லை. அந்தணர் நலவாரியம், சட்டப்பேரவையில் பிராமணர்களுக்கு இடம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒக்கீடு வழங்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
பிராமணர்கள் அல்ல, யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண். பாஜக அரசு சராசரி மக்களுக்கானதை செய்ய வேண்டும். தமிழக அரசியல் என்பது திமுக , அதிமுக இடையில் தான் நடக்கிறது. தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது கேள்வி. அதை ஓட்டாக மாற்றும் திறன் விஜய்க்கு இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago