சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டாசுகள் மட்டும், ரூ.20.01கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவுத்துறையின் மூலம் அக்.31 அன்று நடைபெற்ற தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை மற்றும் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆகியவை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்றவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை அக்.28ம் தேதி முதல் நடைபெற்றது.
இதில், பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
» தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! - எடப்பாடி பழனிசாமி | கார்ட்டூன்
» மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 381 கன அடி நீர் வரத்து
மேலும், இவ்விற்பனையை ஏற்பாடு செய்த அலுவலர்களுக்கும், சிறப்பாக விற்பனை மேற்கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதே போல, வரும் பொங்கல் திருநாளிலும் இது போன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திட, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago