சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் அக்.27-ம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து.” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில், கடந்த நவ.1ம் தேதி, தமிழ்நாடு நாளை ஒட்டி சென்னையில் நடந்த நாதக பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். திராவிடமும், தேசியமும் ஒன்று என்பது நடுநிலை இல்லை. மிகக் கொடுமையான நிலை.
நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக்.
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (நவ.8) சீமான் பிறந்தநாளை ஒட்டி விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் சீமானின் பிறந்தநாளில் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது மாநாட்டின் போதே யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் அரசியலை தான் செய்யப்போவதில்லை என விஜய் கூறியிருந்தார். அதைக் கடைப்பிடிக்கும் விதமாகவே தன்னை சீமான் விமர்சித்திருந்தாலும் கூட அவரது பிறந்தநாளை ஒட்டி விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago