மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை: கமலிகா ஆர்.ராஜாமணி பொறுப்பாளராக நியமனம் - அகில இந்திய தலைவி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைப் பணி பொறுப்பாளராக சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வி.எஸ்.கமலிகா ஆர்.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, அவருக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

செயல்பாடுகளுக்கு வாழ்த்து: தமிழக மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைப் பணியில் தாங்கள் முனைப்புடன் செயல்படுவதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணிக்கு தாங்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். தமிழக மகிளா காங்கிரஸில் உறுப்பினர் சேர்க்கும் பணியை நீங்கள் அர்ப்பணிப்புடன் செய்வீர்கள் என நம்புகிறேன் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் மற்றும் மாநில மகிளா காங்கிரஸ் தலைவிகளைத் தவிர மற்ற அனைத்து நிலைகளிலும் உள்ள பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர். தற்போது மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உறுப்பினர் சேர்க்கை தீவிரம்: அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு அதற்கேற்ப மகிளா காங்கிரஸில் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மகிளா காங்கிரஸில் பதவியில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைப் பணியின் பொறுப்பாளராக வி.எஸ்.கமலிகா ஆர்.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்