கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடினார். இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆக.4-ம் தேதி சாட்டை துரைமுருகன் பாடல் குறித்து பேசி, அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கிறேன் எனக்கூறி பாடல் பாடினார். மேலும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேற்படி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆக.5ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். ஆக.14-ம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் அனுப்பினார்.
» சென்னை, புறநகரில் விட்டு விட்டு மழை: மணலி புதுநகரில் 12 செ.மீ. பதிவு
» ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு
இவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் கு ற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அக்.7-ம் தேதி இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் இவ்வழக்கில் அக்.14-ம் தேதி விசாரணைக்கு அனுமதி வழங்கி தாந்தோணிமலை காவல் நிலையம் இவ்வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் நேற்று (நவ.7-ம் தேதி) அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணைய தளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago